மார்ச்.13.
கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 15.03.2026 அன்று தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் 29.03.2025 சனிக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முகாமில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பணிநியமனை ஆணைகளை வழங்குகிறார். இம் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அன்று 29.03.2025 சனிக்கிழமை தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள வேலை நாடுநர்களும், வேலையளிப்போரும் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் www.priivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து அவ்விணையதளத்தின் வாயிலாக இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்தல் வேண்டும். இம்மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.