ஜன.7.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கனவே குடும்ப அட்டைகள் இருக்கும் போது மக்கள் ஐ.டி. என்ற தனி அடையாளம் எதற்கு என்பதில் தெளிவில்லை.
அண்ணா தமிழ்நாடு என பெயர் வைப்பதற்கு முன்பே திருநெல்வேலியில் கல்வெட்டு இருந்தது பக்தவச்சலம் இருந்தபோது வைக்கப்பட்ட அந்த கல்வெட்டில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் என்றுதான் இருக்கிறது . இவர்கள் தமிழகம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான். தமிழ்நாடு எங்கள் நாடு இஷ்டம் இருந்தால் இரு. இல்லை என்றால் ஓடு. தேவையில்லாதவற்றை பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தமிழ்நாடு முதலமைச்சர் என்பது தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று தான் இருக்க வேண்டும்.
ஆளுநர் தான் சாப்பிடுகிற உணவு, வாங்கும் சம்பளம், பெரிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், பொழுது போகாமல் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டு போக வேண்டியது தான். அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. நமக்கு கோடி வேலை இருக்கிறது என்றார்.