நவ.23.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நிலவுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை விசாரணை நிறைவு பெறவில்லை. தற்போதுஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க இரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய அப்பலோ மனு மீதான விசாரணையில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி, நீதிபதி சி.டி.செல்வம் ஆகியோரை கொண்ட இரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க தயார்.
ஆணையத்தை முற்றிலும் மாற்றியமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்தை தீவிரமாகவும், உண்மையாகவும் விசாரிக்க புதிய அரசு விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளது.