அக்.16.
சென்னையில் பொதுவாக லேசாக மழை பெய்தாலே மின்சாரம் தடை ஏற்படும். ஆனால் கடந்த 2 நாட்களாக கன மழையிலும் கூட மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கிய திட்ட ஆலோசனையை முறையாக அதிகாரிகள் செயல்படுத்தியதே இதற்கு முக்கிய காரணம். வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி முன் ஏற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
செந்தில் பாலாஜி மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் சாலை ஓரம் தாழ்வாக இருந்த மின்சார பெட்டிகள் அனைத்தும் 3ஆண்டுகளில் படிப்படியாக உயரமான இடத்தில் சிமெண்ட் தளத்துடன் மாற்றப்பட்டது.இதனால் சாலையில் தண்ணீர் தேங்கினாலும் மின்சார தடை ஏற்படவில்லை.
மின்தடை ஏற்பட்டால் எளிதில் புகார் செய்ய மாநிலம் முழுவதும் எண் 94987 94987 வழங்கப்பட்டு மின்னகம் மையம் ஏற்படுத்தப்பட்டது. மின்சார உதவி மையம் 24*7 சிறப்பாக செயல்பட்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.
மின்சார ஊழியர்கள் தங்கள் ஏரியாக்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு மின் தடை சரி செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளிடம் மட்டுமே பணியை கொடுத்துவிட்டுப் போய்விடாமல் நேரடியாக பணிகளை கண்காணித்தார். கடந்த ஒரு வாரமாகவே முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டன.