மார்ச்.15.
மாநில அரசு மருத்துவமனைகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக – இருதயம், சிறுநீரகம், குடல், புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக மேற்கோள்ளும்- அதிநவீன ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தினை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.