ஜன.20.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் கூறுகையில்,
புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவினால் பாதிப்புகளே அதிகம் . நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் மசோதா கொண்டு வரும்போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது நாடாளுமன்ற நிலை குழுவிலும் உள்ளது. மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் . புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவினால் மாதம் தோறும் மின் கட்டணம் உயரும் என்று பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றார்.