ஏப்.29.
திருச்சியை சேர்ந்த CRPF வீரரான நீலமேகம் காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். நேற்று, இவர் தனது வீட்டில் நகைகள் திருடு போய்விட்டதாகவும் அதை மீட்க உரிய நடவடிக்கை வேண்டி சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, தமிழக டிஜிபி முனைவர் சைலேந்திரபாபு நேற்று காஷ்மீரில் இருந்த CRPF வீரர் நீலமேகத்தையும் திருச்சியில் உள்ள அவரது மனைவி கலைவாணியையும் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதன்பேரில் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருடுபோன நகைகளை மீட்கவும் குற்றவாளிகளை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது