டிச.19.
தமிழ்நாடு அரசு. வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண். இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு குறித்த காலத்தில் பயிர்சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் மில்லர் 31ண்கள், விசைக் களையெடுக்கும் கருவி (பவர் லீடர்) 32 எண்கள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சம் விசைக் களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம். அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை. சிறு குறு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆதிதிராவிடர் பழக்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள பானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48.000ம்,விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25200 வழங்கப்பட்டு வருகிறது. எனவே பவர் டில்லர்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000, விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ. 88200 வரை மானியம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக பவர் டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ2.40,000/ எணில் ரூ.168000 மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72,000 மட்டும் செலுத்தினால் போதும். விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.130,000 எனில் ரூ.88.200 மாணியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.41,800/ மட்டும் செலுத்தினால் போதும். மானியத்தொகையானது எந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
பொது பிரிவினைர் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல்மானியம் அதிகபட்சமாக ரூ. 12000- விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே ஒட்டு மொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ75600 பொது பிரிவில் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.80000 எனில் ரூ.48000 மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32,000 மட்டும் செலுத்தினால் போதும். இத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்
விவசாயிகள் தங்களின் பங்களிப்பு நொகையினை இணைய வழி RTGS NEFT) அல்லது மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர் டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் (வே.பொ.அலுவலகம்அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் (வேபொ) அலுவலகம் கரூர் மற்றும் குளித்தலை அல்லது வட்டார அளவில் உதவிபொறியாளர் அலுவலகம், (வேபொ) : இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.