பிப்.7.
கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் சரகம் கருப்பத்தூரில் 06.02.2025 ஆம் தேதி இரவு நாகராஜ் என்பவருக்கும், சங்கர் @ வெட்டு சங்கர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சங்கர் என்பவர் வாழைஇலை அறுக்கும் அரிவாளின் பின்பக்கத்தினால் நாகராஜின் வலது பக்க தலையில் அடித்ததில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.புகாரின் அடிப்படையில் லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா, உத்தரவின் படி குற்றவாளியை தேடி வந்தனர். இன்று வெட்டு சங்கர், 35/25, த/பெ.செல்வராஜ், குடித்தெரு, கருப்பத்தூர்,என்பவரை கரூர் மாவட்டம் என்பவரை குளித்தலை டிஎஸ்பி தலைமையில் லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பிள்ளாபாளையம் அருகில் மடக்கினர். கைது செய்ய முற்பட்ட போது எதிரி தப்பிக்க ஓடியபோது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீது லாலாபேட்டை காவல் நிலையத்தில் போக்கிரி வரலாற்று தாள் துவக்கப்பட்டுள்ளதுடன், கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.