நவ.7.
தமிழகத்தில் கூடுதலாக விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் ஈரோடு கரூர் திண்டுக்கல் மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்று அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. 11 ம்தேதி கரூரில் நடைபெறும் விழாவில் விவசாயிகளுக்கு ஐம்பதாயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்க இருக்கிறார். திமுக ஆட்சி அமைந்ததும் ஏற்கனவே ஒரு லட்சம் மின் இணைப்பு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது மின் உற்பத்தியை பெருக்கி மின் இணைப்பு கிடைக்காமல் 10 ஆண்டு 15 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த விவசாயிகளின் கோரிக்கையை எடுத்து எப்போது இணைப்பு வழங்கப்படுகிறது. .இணைப்புக்காக காத்திருப்போர் பட்டியல் உள்ள விவசாயிகளை தொடர்பு கொண்டு இந்த தகவலைச் சொன்னபோது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுவது உறுதி என அமைச்சர் தெரிவித்தார்.