அக்.29
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பார்வையிட்டார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஏற்கனவே நேரில் பார்வையிட்டார். கீழடி அகழாய்வுகளிலிருந்து இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ள 11470 தொல் பொருட் களில் முக்கியத்துவம் நிறைந்தவற்றை காட்சிப்படுத்த அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடத்தை பார்வையிட்டார். எட்டு அகழ்வாய்வு குழிகளை பார்வையிட்டு தொல்லியல் அலுவலர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.
கொந்தகை கிராமத்தில் கீழடி தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ 12 .21 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த அகழ் வைப்பகத்தில் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார் . அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதா ஜீவன், ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் உடனிருந்தனர்.