டிச.10.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார் . பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் அரிசி போன்ற மளிகை பொருட்களை வழங்கினார். 3000பேருக்கு பெருங்குடி மண்டலம் குப்பம் பகுதியிலும், சோளிங்கநல்லூர் மண்டலம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 500 பேருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கி பணியை துவக்கி வைத்தார்.
பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், வட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. புயலால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகலுக்குள் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து விடும் .அதன் பிறகு நிவாரண உதவிகள் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இன்று மாலைக்குள் முழுவதுமாக இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.