நவ.18.
வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப்பக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்றுதொடங்கி வைத்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் முனைவர் சண்முகம், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் முனைவர் ஜெயசீலன் உடன் இருந்தனர்.