ஜன.6.
தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 755 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர். இளங்கோகலந்துகொண்டு பார்வையிட்டனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் கபரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் 750 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த 30.11.2020 அன்று வெளியிட்டஅரசு ஆணையில் ரூ.440.63 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜல் ஜீவன் நிதி உதவியின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் இடைக்கால (2037 ஆண்டு) மற்றும் உச்சகட்ட(2052ஆண்டு) மக்கள் தொகை முறையே 186524 மற்றும் 208659 ஆகும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 14.93 மில்லியன் லிட்டர் மற்றும் 1629 மில்லியன் லிட்டர் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான நீர் ஆதாரம் காவிரி ஆற்றில் மறவாப்பாளையம். சேமங்கி மற்றும் செவ்வந்திபாளையம் ஆகிய இடங்களில் நீர் சேகரிப்பு கிணற்றில் இருந்து பெறப்பட்டு 14.93 மில்லியன் லிட்டர் நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் சுத்த நீரானது 376.19 கி.மீ நீளமுள்ள பிரதான நீருந்து குழாய்கள் மூலம் 130 தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகளுக்கு கொண்டு செல்லபடுகிறது. பின்னர் ஊராட்சி தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகளிலிருந்து 741457 கி.மீ. கிளை நீர்உந்து குழாய்கள் மூலம் ஏற்கனவே பயனில் உள்ள 896 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 149 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுகின்றது. பின்னர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து 1555.36 கி.மீ நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கபட்ட உள்ளது.
பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 இலட்சத்து 58 ஆயிரம் மக்களுக்கு நாளொன்றுக்கு 1298 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு இயக்குவதற்கும் பராமரிப்பதற்கு ஒரு சவாலாகவே உள்ளது. வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தில் ஏதாவது பிரச்சனைகளோ பழுது ஏற்பட்டால் உடனடியாக அவசரகால பணியாக கருதி அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து உடனடியாக பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் குடிநீருக்காக வழங்கப்படும் தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாக பொறியாளர்கள் வீராசாமி, லலிதா. உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன் உதவி பொறியாளர் சிவராஜ். க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திக், கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்பாத்தாள் (குப்பம்), ஜெகதாம்பாள் (நெடுங்கூர்), ஜெயலட்சுமி (க. பரமத்தி), ஸ்ரீரங்கன் (ஆரியூர்), செல்வி (நடந்தை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.