ஏப்.13.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கரூர் மாவட்டத்தில் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 11 நூலகக் கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல், எம்.எல்ஏ.இளங்கோ, கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்
கரூர் மாவட்டம் இனாம் கரூரில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட முழுநேரக்கிளை நூலக இணைப்புக் கட்டிடம், தென்னிலையில் ரூ.22.லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊர்ப்புற நுலகம், சின்னதாராபுரத்தில் ரூ.22.லட்சத்தில் ஊர்ப் நுலகம், சேங்கலில் ரூ.22 லட்சத்தில் ஊர்ப்புற நுலகம், கடவூரில் ரூ.22 லட்சத்தில் ஊர்ப்புற நுலகம், குளித்தலையில் ரூ.22 லட்சத்தில் முழுநேரக்கிளை நூலக இணைப்புக் கட்டிடம். தண்ணீர்பள்ளி, பொய்யாமணி, இனுங்கூரில் தலா ரூ.22 லட்சத்தில் ஊர்ப்புற நூலக கட்டிடம். வடசேரியில் கிளை நூலக இணைப்புக் கட்டிடம். காவல் காரன்பட்டியில் ஊர் புற நுலகம் என மொத்தம் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 11 நூலகக் கட்டடங்களை முதலமைச்சர் தமு.க.ஸ்டாலின் அன காணெளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணாக்கர்களை அழைத்து புத்தகங்களை தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்திகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், மாவட்ட நூலக அலுவவர் சிவக்குமார். அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி, தாசில்தார் தனசேகர் கலந்து கொண்டனர்.