ஜூன்.12.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 3 வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்டா பாசனத்திற்காக 12 டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது-
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி உயர்ந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2014 -15 ஆம் ஆண்டில் 1.2 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. 2020 -21 ஆம் ஆண்டில் 1.04 கோடி வெற்றி டன்னாக இருந்த நெல் உற்பத்தி 2022 ஆம் ஆண்டு 1.22 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. 2020-21 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி பரப்பளவு 20.36 லட்சம் எக்டேராக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 22.05 லட்சம் எக்டேராக உயர்ந்தது.
இரண்டு ஆண்டுகள் வேளாண்துறைக்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த திட்டங்களையும், கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தி இதுவரை 23.54 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ 81.12 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.
குறுவை சாகுபடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.