டிச.27.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நீதிக்கான கூட்டணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில், தலைவர் பொறுப்புக்கு சுரேஷ் (தினகரன்), பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஹசீப் (அரண் செய்), பொருளாளர் பொறுப்புக்கு மணிகண்டன் (ஜெயா டிவி), இணைச் செயலாளர் பொறுப்புக்கு நெல்சன் (ஒன் இந்தியா தமிழ்), துணைத் தலைவர்கள் பொறுப்புக்கு சுந்தர பாரதி (புதிய தலைமுறை) மற்றும் மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) உள்ளிட்டோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.
“சென்னை பத்திரிக்கையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வாழ்த்து பெற வந்த நிர்வாகிகள், அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.