பிப்.14.
உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் பகுதியில் கூறியிருப்பது –
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கான எதுவுமே இல்லை. பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது. பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. திமுக எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை.
திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது என்று கூறும் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்பதற்கு பதில் சொல்லவில்லை. ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல்காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார். 3 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதுதான் மர்மமாக உள்ளது. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை வெல்லக்கூடிய தொகைக்கு மத்திய அரசு வரி விதிப்பது கொடுமை. இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால், ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு கையெழுத்து போடுவீர்கள்?-என ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றி இருக்கிறோம், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம். எஞ்சிய ஒருசில திட்டத்தையும் அடுத்த ஓராண்டுக்குள் நிறைவேற்றுவோம், நிச்சயம் நிறைவேற்றி காட்டுவேன்-என உங்களின் ஒருவன் கேள்வி’ பதிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.