மே.24.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் துவங்கி உள்ளது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது .சிஎஸ்கே அணியில் கான்வே கெய்க்வாட் சிறப்பாக விளையாடினர். கெய்க்வாட் 60 ரன்கள் 40 ரன்கள் குவித்தனர். சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய குஜராத் வீரர்கள் சொற்பரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் கில் 42 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் சிறப்பாக விளையாடிய நிலையில் மற்றவர்கள் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர் அவர் 30 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . சிஎஸ்கே அணியில் தீக்சனா , தீபக்சாகர், ஜடேஜா ,பதிரனா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளும் , தேஷ் பாண்டே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது . ரசிகர்களின் ஆரவாரம் விசில் சத்தத்தால் சேப்பாக்கம் மைதானம் திருவிழா போல களைகட்டியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிஎஸ்கே அணி 10வது. முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.