. பிப்.27.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் முக்கிய நகரங்களில் உள்ள எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்களை ரஷ்ய படைகள் தகர்த்ததால் பல இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிகின்றன. 3 குழந்தைகள் உள்பட 198 பேர், போரில் பலியாகியுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணியில் உக்ரைன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. அதேபோல் உக்ரைனில் ரஷ்யா மொழி பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது ரஷ்யாவின் கூறும் குற்றச்சாட்டு. ரஷ்ய மொழி பேசும் பிரிவினைவாத குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படையை அனுப்பும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் உக்ரைன் நாட்டை விட்டு லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகள் அகதிகளாக போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேநேரத்தில் உக்ரைன் ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் ரஷ்யாவுடன் யுத்தம் நடத்தியாக வேண்டும் என உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் ஸ்லென்ஸ்வ்கி தலைநகரம் தங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என தெரிவித்துள்ளார். ராணுவ உடை அணிந்து அதிபர், வீரர்களையும் பொதுமக்களையும் போருக்கு தயார்படுத்தி வருகிறார் .
அணு உலையை தொடர்ந்து எண்ணெய் கிணறுகள் மீதும் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.