மார்ச்.23.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பாலின சமத்துவம், சமவாய்ப்பு மற்றும் பெண்கள் அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம் வரவேற்புரையாற்றினார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வாழ்த்துரை வழங்கினர். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M.ஜோதிராமன் துவக்க உரையாற்றினார். இதனை தொடர்ந்து வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ராகவன், வழங்கறிஞர். சென்னை உயர்நீதிமன்றம். மதுரைக்கிளை எழுத்தாளர் ஸ்வேதா பாலின சமத்துவம், சமவாய்ப்பு மற்றும் பெண்கள் அதிகாரம் குறித்து அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் விளக்கினார். பாலின சமத்துவத்தின் துவக்கமே மனைவியை மதிப்பதில் இருந்து தான். பைலட் என்றால் ஆண் செவிலியர் என்றால் பெண் என்பதிலிருந்து, விளையாட்டு உபகரணங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது வரை வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாட்டை களைய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்றனர். வழக்கறிஞர் சுமதி, பெண்கள் பணிபுரியும் இடங்களில் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் அதைத் தீர்க்க பெண்கள் எவ்வாறு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது குறித்து பேசினார். பேச்சாளர் ஆசிரியர் ஸ்யாமளா ரமேஷ் பாபு, புராண இதிகாசங்களிலிருந்தும் மற்றும் பாடல்களிலிருந்தும் சொல்லப்பட்டுள்ள பெண் உரிமை மற்றும் வரலாற்று நிகழ்வு, பெண்ணுரிமையை எவ்வாறு போராடிப் பெற வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.
வழக்கறிஞர் சுதர்ஷனா சுந்தர் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு எவ்வாறு புகார் கொடுப்பது. யாரிடம் புகார் கொடுப்பது எவ்வாறு புகார்கள் விசாரிக்கப்படவேண்டும் என்பது பற்றியும், விசாகா கமிட்டி அமைந்த உள்விவகாரப் புகார் குழு மற்றும் அதன் செயல்பாடு குறித்தும் விரிவுரையாற்றினார். நிறைவு உரையை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் B.புகழேந்தி வழங்கினார். N.S.ஜெயப்பிரகாஷ். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர். கரூர் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.