நவ.26.
கரூர் கரூர் நகர உட்கோட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய சரகம், காந்திகிராமம் டபுள் டேங்க் அருகில் கடந்த 21.11.2024 ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு மெடிக்கல் நடத்தி வரும் பெண்ணிடம் அடையாளம் தெரியாத ஒரு நபர் மாத்திரை கேட்பது போல் வந்து மேற்படி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறிக்க முயற்சி செய்தார். அவர் சுதாரித்துக்கொண்டு தட்டிவிட்டதால் ஓடிவிட்டான். தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவந்தது.
வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான்அப்துல்லா உத்தரவுப்படி, கரூர் நகர உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வராஜ் மேற்பார்வையில் பசுபதிபாளையம் சர்கிள் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை யினர் சம்பவம் நடைபெற்ற மெடிக்கலிலும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள CCTV Camera பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் 1) ரஞ்சித்குமார், 28/24, வீரணம்பட்டி, காலனி தெரு, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம் மற்றும் 2) சக்திவேல், 30/24, வாட்டர்பால் எஸ்டேட், 2வது டிவிசன், வால்பாறை தாலூக்கா, கோயம்பத்தூர் மாவட்டம் (தற்போது) சக்தி நகர், தெற்கு காந்திகிராமம், கரூர் என தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகளை தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது தப்பிக்க முயற்சி செய்து கீழே விழுந்ததில் ரஞ்சித்குமாருக்கு கை எலும்பும், சக்திவேலுக்கு கால் எலும்பும் முறிந்தது. மேலும் விசாரணையில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்ததும், ரஞ்சித்குமார் செயின் பறிக்க முயன்றதும், பின்னர் சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி சென்றனர். கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளி ரஞ்சித்குமார் என்பவர் மீது கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 03 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து மேற்படி கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படையினரை கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார்.
https://www.facebook.com/share/v/1B4WyyNdmi/
பாஜகவில் எத்தனை ஜாமீன் அமைச்சர்கள்?. வெளிநாட்டு படிப்பால் என்ன நன்மை?. அண்ணாமலையை வெளுத்து விட்ட செந்தில் பாலாஜி
கரூர். டிச.9. கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொது மக்களை சந்தித்து...