அக்.29.
t20உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் -வங்கதேச அணிகள் ஆடின . இரு அணிகளுக்கும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற வாழ்வா சாவா போட்டியாக இருந்ததால் பரபரப்புடன் வீரர்கள் விளையாடினார். முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. கெயில், லூயிஸ், ஹெட்மையர் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர். சேஸ்39, பொலார்ட் 14 ரன்கள் எடுத்தனர். பூரன் களமிறங்கி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார் . 4 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசி 22 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார் .
அடுத்து வங்கதேச அணி விளையாடியது தாஸ் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார் . மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். எனினும் கேப்டன் மகமதுல்லா வெஸ்ட் இண்டீஸ் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தார். அவர் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியைதோல்வி பாதைக்கு தள்ளியது. ரசல் கடைசி ஓவரை அருமையாக வீசி வெற்றி தேடித் தந்தார். வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி ஓவரில் திணறி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டி என்பதையே மறந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எளிதான கேட்ச்சையெல்லாம் கோட்டை விட்டனர்.