மார்ச.7.
கரூர் மண்மங்கலம் தாலுகா ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் எழுந்தருளியுள்ள மகா சோளியம்மன், மகா முத்துசாமி தெய்வங்களுக்கு புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டு ஆலய மகா குடமுழுக்கு வரும் 10ம் தேதி திங்கள் அன்று காலை 5:30 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவையொட்டி இன்று கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலத்தில் வந்தனர். குதிரைகள் காளை மாடுகள் வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டத்துடன், கடவுள் வேடமிட்டு ஏராளமான பக்தர்கள் வந்தனர்..
ஆரியூர் கொங்கு ரவி குழுவினரின் ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இரவு சின்ன கரசப்பாளையம் பழனிவேல் குழுவினரின் ஈசன் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது நாளை 8ம் தேதி இரவு 7 மணிக்கு பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன் குழுவினரின் பட்டிமன்றம், இரவு 9.30மணிக்கு சின்னமநாயக்கன்பட்டி ஆசிரியர் ராமசாமி குழுவினரின் கொங்கு கோலாட்டம் நடைபெறுகிறது. 9 ம் தேதி ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூர் அம்மன் விஸ்வநாதன் பவளக்கொடி கும்மி ஆட்டம், 7.30 மணிக்கு ட்ரோன் ஷோ வான்வழி கண்காட்சி, 8 மணிக்கு சின்னத்திரை புகழ் செந்தில்கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று மதியம் அன்னதானம் தொடங்கியது திங்கட்கிழமை மதியம் வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.