டிச.9.

இராமேஸ்வரத்தில் இருந்து 14 km தூரத்தில் வங்கக்கடலும் இந்திய பெருங்கடலும் சந்திக்கும் புள்ளியில் துறைமுக நகரமாக விளங்கியது தனுஷ்கோடி. ஒரு துறைமுகம், ரயில் நிலையம்,தேவாலயம்,தபால்தந்தி அலுவலகம், சுங்க கட்டிடம் செயல்பட்டன. 3000 க்கும் மேல் மக்கள் வசித்தனர். சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் , துறவிகள் வந்துசெல்வர். மீன், கருவாடு, உப்பு போன்றவை ஏற்றுமதி ஆகின. இரு நீராவி கப்பல்கள் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை சென்று வந்தன. (சென்னை எழும்பூரில் இருந்து இயங்கி வந்த Indo ceylon boat mail இந்தியாவையும் இலங்கையையும் வெறும் 80 ரூபாய் கட்டணத்தில் இணைத்தது. அந்த இரயிலில் வந்து தனுஷ்கோடியில் கப்பலில் ஏறினால் தலைமன்னாரில் இறங்கி அங்கிருந்து இரயிலில் கொழும்பு சென்றனர். 22 டிசம்பர் 1964 நள்ளிரவுபேய்க்காற்றுடன் பெரிய அலைகளுடன் பெருமழை பெய்தது.
பாம்பன் – தனுஷ்கோடி பயணிகள் இரயில். கடலில் கவிழ்ந்து பெட்டிகளில் இருந்த 100 க்கும் அதிகமான மக்கள் சம்பவ இடத்திலேயே மூழ்கி இறந்தனர். குடிசைகள்,ரயில் நிலையம், அஞ்சலகம், பள்ளி,சுங்க அலுவலகம்,தேவாலயம் அனைத்தும் அழிந்து சிதைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ரயில் இணைப்பை புதுப்பிக்கவும், பாம்பன் இணைப்பு பாலம் கட்டவும் அடிக்கல் நாட்டினார். புதிய பாதை 17.20 கி.மீட்டர் தொலைவிற்கு ரயில் பாதை 7மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது.
ரயில் பாதை அமைக்க நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் ரயில் பாதை அமைக்க டெண்டர் விடப்படும் என ஆய்வு பணி மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.











