ஜூலை.7.
கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் கல்விபயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல சின்னமநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடம், கே.பேட்டை தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடம் மற்றும் கீழவெளியூர் தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள 1 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teachers) பணிக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET Paper-I) தேர்ச்சி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (BT. Assistant) பணியிடம், தமிழ் பட்டதாரி 1, சமூக அறிவியல் பட்டதாரி 4ம், கோட்டமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் பட்டதாரி 1, நந்தன் கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் 1, சமூக அறிவியல் 1ம், மாவத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர். நெய்தலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர், தெலுங்கப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர், சணப்பிரட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஆகிய பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) பணியிடத்திற்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET Paper II) தேர்ச்சி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்டவாறு காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ0அஞ்சல் மூலமாகவோ 09.07.2024 க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முதல் தளம். அறை எண் 114 கரூர்-630007 என்ற முகவரிக்கு அனுப்பலாம். என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.