பிப்.14.
அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட உதய தினம் இன்று கரூர் கிளை 2ல் கொண்டாடப்பட்டது. 63 ஆண்டுகள் கடந்து 64 ஆம் ஆண்டில் சேவையாற்றி வரும் காப்பீட்டு கழக சங்கத்தின் பணிகளை பாராட்டும் வகையில் கோட்ட சங்க துணைத் தலைவர் நல். பெருமாள் தலைமையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கிளை செயலாளர் செல்வராஜ், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைவர் ஜாபர் உசேன் மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.