பிப்.26.
தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா சென்னை -வேளச்சேரி அம்மா திருமண மண்டபத்தில் நேற்று. (25-2-25) நடைபெற்றது. இவ்விழாவிற்கு துணைத் தலைவர் /மலர்க் குழு தலைவருமான துரை கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் எஸ் .பழனியாப்பிள்ளை ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் டி .எஸ்.ஞானக்குமார் நிதிநிலை அறிக்கையினை வாசித்தார் . சங்க நிறுவனர் ஜி. கே. ஸ்டாலின் துவக்கவுரையாற்றினார்.தலைவர் பி. ஆர் .சுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் பி. நெல்சன் ,க.சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் எம். ஏ. பல்த்தசார் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன் கனககுமார், மு.நெடுமாறன், ஜி . முருகேசன் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினர். உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை நிர்வாகக் குழு உறுப்பினர் மஸ்தும் ஜகான்,பொதுக்குழு உறுப்பினர்கள் டி. ராஜேஸ்வரி மற்றும் ஆர்.சரோஜா வழங்கினர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் டி.மகேந்திரன் நன்றி கூறினார்.
முன்னதாக சங்கத் தலைவர் தலைமையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் விழா சிறப்பு மலரை வெளியிட்ட சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு அதைப் பெற்றுக் கொண்ட பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலருக்கான விளம்பரங்களை பெற்றுத்தந்த உறுப்பினர்கள் அதற்கான தொகையை மார்ச் 31ம்தேதிக்குள் மலர்க் குழுத் தலைவருக்கு அனுப்பிட தீர்மானிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.