ஆக.8.
தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் 6வது நிர்வாகக் குழு கூட்டம் கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி தலைமை வகித்தார். நிறுவனர் ஜி.கே.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் துரை கருணாநிதி, செயலாளர் பழனியா பிள்ளை, துணை செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் ஞானகுமார், மோகன் கணேச குமார், சந்திரசேகரன், மஸ்தூம் ஜகான், நெடுமாறன், நெல்சன், முக்கூடல் சந்திரசேகர் பவுன்ராஜ், மோகன் கனககுமார், சாகுல் ஹமீது, சோமசுந்தரம், சத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயற்கை எய்திய சங்க உறுப்பினர் பெருமாள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரையும் உடைமைகளையும் இழந்த 400 க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அடுத்த மாதம் செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உளள அஜந்தா ஹோட்டலில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது, சந்தா செலுத்துவதை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் என ஏற்றுக்கொள்வது, பிப்ரவரி மாதம் 3ஆம் ஆண்டு சங்கத் துவக்க விழாவையொட்டி வெளியிடப்படவிருக்கும் ஆண்டு மலருக்கு பெருமளவு விளம்பரங்களை சேகரிப்பது, வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிர்வாகக் குழுவில் மாற்றம் செய்வது, மூத்த பத்திரிகையாளர்களுக்கு ரயில் பயணத்தின் போது சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசிய திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.