பிப்.18.
தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் 3 – ஆம் ஆண்டு துவக்க விழா மலரை வெளியிட்டு சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா வரும் 25-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி சங்கத்தின் ஆண்டு மலர் வெளியிட்டு விழா இன்று (18-2-25) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமை வகித்து மலரை வெளியிட்டார். அதனை பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நிறுவனர் ஜி. கே. ஸ்டாலின், சங்கத்தின் தலைவர் பி. ஆர். சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்து பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் எஸ்.பழனியாபிள்ளை, துணைத் தலைவர் துரை கருணாநிதி, ஆகியோர் நிர்வாகிகளை அறிமுகம் செய்து ஆண்டு மலரை வெளியிடுமாறு பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொண்டனர்
நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் டி. எஸ். ஞானக் குமார், துணைச் செயலாளர் ஆர். சந்திர சேகரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி. நெல்சன், மு. நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பேரவைத் தலைவர் மு. அப்பாவு பேசுகையில், தமிழகத்தில் நலிந்த நிலையில் பத்திரிகையாளர்கள் உள்ளனர் என்றும் வட்டார பகுதி வாரியாக பணியாற்றி ஓய்வூதியம் பெறுவதற்கு கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் வழிகாட்டுதல்களை செய்து உதவிட வேண்டுமாறும் இது தொடர்பாக பத்திரிகை நிறுவனங்களுக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ் செல்வன் பங்கேற்றார்.