ஜன.9.
இயற்கை பேராசான் ஐயா நம்மாழ்வார் விதைக்கப்பட்ட வானகத்தில் தமிழ்நாட்டின் இயற்கை விவசாய அமைப்புகள் மூத்த முன்னோடிகள் பங்கேற்போடு கலந்தாலோசித்து “தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்” உருவானது, அதன் கொள்கை , இலக்கு , செயல் திட்டம், கலந்தாலோசிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டன அதனடிப்படையில் கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு தமிழ்நாட்டின் அனைத்து இயற்கை விவசாயிகள் , இயற்கை விவசாய அமைப்புகள் , சூழல் ஆர்வலர்கள் பங்கேற்புடன் *இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு , 2025 – பிப்ரவரி -15, 16* , டெக்ஸ் வ்யாலி, சித்தோடு – ஈரோடு நிகழவிருக்கிறது …. அதன் செயல் திட்டங்களை மூத்த வேளாண் முன்னோடிகளின் வழிகாட்டலுடன் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டு வேலை திட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்து இயற்கை உழவர்களின் ஒன்றிணைந்த இருப்பையும், நஞ்சற்ற உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை எனும் நுகர்வோர் பங்கேற்புடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொதுமக்களை அழைக்கிறோம் ! வாரீர் !
ஒத்துழைத்து கரம் கோர்க்கும் அனைத்து தோழமை அமைப்புகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்! தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் .
1) வெற்றிமாறன்.இரா – 9566667708
2) ஐந்துணை வேலுசாமி – 9842853068
3)நா. தெ. சிவகுமரன்
4)ஹமாகிரன்
5) வானகம் ரமேவஷ்
6)கார்த்திக் குணசேகரன்
7)விஷ்ணு பிரியன்
8)சிதம்பரம் சுரேஷ்குமார்
9) இரா தயாநிதி
10 கௌரி
11) தாய்மண் பிரதீப்
12) வாசிம் ராஜா
13)கலசபாக்கம் ராஜன்
14) இயல் கார்த்தி.