மார்ச்.18.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது-
காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு 496.52 கோடி ஒதுக்கீடு. டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு.
குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல். வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. கால்நடை பராமரிப்புக்காக ரூ.20 கோடியில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்கப்படும். சென்னைக்கு அருகே ரூ.200 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற அமைப்பை அரசு உருவாக்கும். தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு. வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும்.
அரசு நிலங்களை குத்தகைக்கு விடும் சிக்கல்களை தீர்க்கவும், வெளிப்படையான குத்தகைக்கு விடவும் விரிவான ‘நில குத்தகை கொள்கை’ வகுக்கப்படும். அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.
பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படும்.
மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ₹20,000 கோடி இழப்பு ஏற்படும். தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும் தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ₹2 கோடி ஒதுக்கீடு.
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ₹82.86 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடடு. கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும்
அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி. தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடும். பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு. நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.
அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும்.