ஜன.19.
தமிழ்நாடு அரசின் தமிழ் மொழித் தேர்வில் மூன்றாண்டுகளில் கரூர் பரணி பார்க் குழுமத்தில் 235 பேர் சாதனை படைத்தனர். மொத்தம் எண்பத்தி நான்கு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பரிசுத் தொகை வென்றனர்.
தமிழ் மொழியில் தலை சிறந்த மாணவர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசால் 2022ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில், தமிழ்மொழி இலக்கிய திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் ‘அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளி மாணவர்கள் பிரிவில்’, ஒரு ஆண்டிற்கு 750 பேருக்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.36,000/- பரிசுத் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கு பெரும் மிகக் கடினமான இத் தேர்வில் கரூர் பரணி பார்க் மெட்ரிக், பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயின்று 2022ல் 46 பேர் (கட் ஆப் மதிப்பெண் நூற்றுக்கு எண்பத்தி ஒன்று), 2023ல் 103 பேர் (கட் ஆப் மதிப்பெண் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்று), நிகழாண்டு 2024ல் 86 பேர் (கட் ஆப் மதிப்பெண் நூற்றுக்குத் தொண்ணூற்று நான்கு) வெற்றி பெற்று மூன்றாண்டுகளில் இதுவரை 235 பேர் வெற்றி பெற்று, மொத்தம் எண்பத்தி நான்கு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசின் பரிசுத் தொகை வென்று அன்னைத் தமிழுக்கும், கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
235 சாதனை மாணவர்களுக்கும், அவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பயிற்சி அளித்த பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டு விழா பரணி பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது. குழுமத் தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.
2024 நிகழாண்டில் நூற்றுக்கு தொண்ணூற்றி நான்கு கட் ஆப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று ஜோயிஷா, ரித்துஸ்ரீயா, பவித்ரா, ரித்திகா , கனிஷ்க், தாரணி , நித்தின், ஹரிணி, நித்தின், ஸாத்விகா, சந்தோஷினி, தர்ஷணா, கர்ணிகா, மிதுனா, அக்ஷய கிருபா, ரஞ்சித், நேசிகாஸ்ரீ, தருணிகா, சிபி,பிரணவ், அஸ்மிதா, சாஸ்மிதா, ஆதித்யா, சபர்னா, ரக்ஷா, காருண்யாஸ்ரீ, சுதர்ஷினி, பிரவீன், ருச்சிதா, சிவப்பிரியா, நிதிஷ், வருண், ரித்திக், நேசபிரியன், சாதனா, காவ்யஸ்ரீ, நிவஸ்ரீ, ஐஸ்வர்யா , சபரி தர்ஷ்ணி, ஜனனி , நேகா, தரணி, தீபிகா, பாண்டியராஜா, அபிதா, மது மிதா, பிரகாஷிகா, மதன், ரூபிகா, யுவஸ்ரீ, ஹரிணி, தாணுமாலயன், தீபிகா, கிஷோர்குமார், கல்பனா, ஹவிபிரபா, பூஜா, அபினிகா, தாரணி, பிரனிகா, ஜெயனி, சாதனா, லித்திக்கா, வர்ஷிகா, திருமலை செல்வம், அர்ச்சனா, ஜெஸ்வின் ஜோஸ்வா, நேஹா, உதயா, நித்திஸ், தாரா, பிரியதர்ஷினி, திவ்யஸ்ரீ, திருவதனம், நிஷா, உதயதாரணி, பூவிதா, ஸ்ரீப்ரியா, ரித்திகா, நிதர்ஷணா, ஷன்மதி, தேசிகா, தீபபாரதி, நிதின் சரவணா, ராகுல், ருத்ரா, ஷிவானி ஆகிய 86 பேர் அபார சாதனை படைத்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ்ச் சங்க இலக்கியத்தின் முப்பத்தி ஆறு நூல்களையும் தமிழ் மொழியின் முதல் எழுத்து வடிவமான ‘தமிழி’ எழுத்து வடிவில் கையெழுத்து பிரதி புத்தகங்களாக பரணி கல்விக் குழும ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து தொகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகது. மேலும், தேசிய அளவில் ஒரு முன்மாதிரி முன்னெடுப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் மட்டும், பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அகில இந்திய பன்னிரெண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ அரசுப் பொதுத் தேர்வில் பரணி வித்யாலயா மாணவர்கள் ஐந்து பேர் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தமிழகத்திற்கு தேசிய அளவில் பெருமை சேர்த்தனர்.
அரசுப் பொதுத் தேர்வுகள், நீட் ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகள், தேசிய அறிவியல் ஆய்வுகள், சாரணர் இயக்க சிறப்பு மாவட்டம் என்ற பெருமைக்குரிய கெளரவம், நூற்றுக்கணக்கான இந்திய குடியரசுத் தலைவர் விருதாளர்கள், ஆயிரக்கணக்கான மாநில ஆளுநர் விருதாளர்கள், பல ஒலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய போட்டிகளில் விளையாடும் பரணி மாணவர்கள், பிற நாடுகளில் உள்ள பள்ளிகளுடன் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம், என பள்ளிக் கல்வியின் அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்து வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியாக இருந்தாலும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகச் செயல்படும் பரணி பார்க் கல்விக் குழும சாதனை ஆசிரியர்களுக்கும், கடினமான தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்விக் குழும நிர்வாகத்திற்கும் பல்வேறு தமிழ்ச் சான்றோர்களும், உலகத் தமிழ் அமைப்புகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.