ஏப்.18.
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைதுறையில் தற்போது நடந்து வரும் ஊழல் முறைகேடுகளினால், பல்வேறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் (2011-2021) நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.கழிவு மணல் கலந்தும் – நச்சு தன்மையுடைய விசக் கழிவுநீரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தரமற்ற எம்-சாண்ட் மணலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு ஆய்வு கூடங்கள் அமைக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூகூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கஒருங்கிணைப்பாளர் முகிலன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கஒருங்கிணைப்பாளர் சண்முகம் – விஜயன், லா பவுண்டேஷன் பொறுப்பாளர் வாசுதேவன் ,மே17 இயக்கக ஒருங்கிணைப்பாளர் திலீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மனுவில் கூறியிருப்பதாவது+
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் தற்போது போடப்படாத பல சாலைகளுக்கு பில் போட்டு ஊழல் முறைகேடு செய்ததால், அது பலராலும் சுட்டிக் காட்டப்பட்டு பல்வேறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது தற்போது அரசால் இடைநீக்கம் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முறைகேடுகளை மிக அதிகமான அளவில், கரூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தெரிவித்து உள்ளார்.
இந்த ஊழல் முறைகேடுகளை
ஏதோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆராய்ந்து தேடிக் கண்டுபிடித்தது அல்ல.
கடந்த ஆட்சி காலத்தில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் இது போன்ற எண்ணற்ற ஊழல் முறைகேடுகளை அப்போது (2011-2021) ஆட்சியில் இருந்தவர்கள் செய்து வந்துள்ளனர்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல, நேற்று வரை ஆட்சியில் இருந்து பல்வேறு வகையில் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்தவர்களுக்கு, இன்று நடைபெறும் ஊழல் தெரிந்து இருப்பது ஒன்றும் வியப்பான செய்தியல்ல.
கடந்த 10 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த முன்னாள் தமிழக முதல்வரால் எண்ணற்ற முறைகேடுகள் பல நிகழ்த்தப்பட்டது பற்றி நீதிமன்றத்தாலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பட்டியலின (தாழ்த்தப்பட்ட) மக்களுக்கு பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி உட்பட, பல்வேறு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் அங்கு செலவு செய்யப்படாமல், ஊழல் முறைகேடு செய்வதற்காகவே நெடுஞ்சாலைதுறைக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டது பலமுறை கணக்கிட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ஊழலில் நம்பர் ஒன்:
மீட்டால் அரசு கடனையே அடைத்துவிடலாம்
தமிழகத்தில் நடைபெற்ற ஊழலில் நிறுவனமயமாக்கப்பட்ட மிகப்பெரிய ஊழல் நெடுஞ்சாலைத்துறை ஊழலாகும்.
நெடுஞ்சாலைத் துறையில் நடந்த ஊழல் முறைகேடுகளினால் இழந்த தொகையை, முறையாக விசாரித்து ஆய்வு செய்து அரசால் மீட்க்கப்பட்டாலே, பல்லாயிரம் கோடி ருபாய் அரசுக்கு கிடைக்கும். அரசின் மொத்தக் கடனில் ஒரு பகுதி அடைத்து விட முடியும்.
எனவே கடந்த 10 ஆண்டுகளில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில்
நடந்துள்ள பணிகளின்
ஊழல் முறைகேடுகள், அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.