ஜூன் 20.
டி-20 உலக கிரிக்கெட் தொடர், சூப்பர் 8, சுற்றுப்போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. விராட் கோலி – ரோகித் சர்மா களமிறங்கினர். 3ஆவது ஓவரிலேயே ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட். விராட் கோலியுடன் கைகோர்த்ரிஷப் பந்த்10 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் அவுட் ஆக, அடுத்து கோலி 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 79 ரன் எடுத்த நிலையில் துபே 10 ரன்களில் கிளம்பினார். சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட அவருக்கு ஹர்திக் பாண்டியா துணை நின்றார். போராடி 53 ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ் 17-வது ஓவரில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது. 11 ரன்களில் குர்பாஸ், தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான், ஜஸாய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குல்பதின் நைப் 17, அஸ்மத்துல்லா 26, நஜிபுல்லா 19, நபி 14, கேப்டன் ரஷித் கான் 2, நவீன் உல் ஹக் 0, நூர் அகமது 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான்.
இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். குல்தீப் 2 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். பும்ரா 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இந்திய அணி அடுத்தப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.