நவ.14.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்தது முதலில் ஆடிய நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார் 3 சிக்சர்கள் 10 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ரன்களை குவிக்கத்தொடங்கினர். வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அவர் 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மார்ஸ் 50 பந்துகளில் 77 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விக்கெட்டை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். மறுபக்கம் ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ஆடினர். ஸ்கோர் 15 ஆக இருந்தபோது பின்ச் விக்கெட்டை வீழ்த்தினர். அதன் பின்னர் ஸ்கோர் 107 இருந்தபோது வார்னர் விக்கெட்டை எடுத்தனர். அதன்பிறகு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். வீசிய அத்தனை பந்துகளையும் அனாயாசமாக ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ஆடினர். இதனால் ஆஸ்திரேலியா 18.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தி சாம்பியன் ஆனது.
முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இப்போட்டிகளில் 2ஆயிரம் தங்களை வில்லியம்சன் கடந்தார்.