நவ.13.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இன்று இறுதி போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பில்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் நடையை கட்டினர். ரிஸ்வான் 15, ஹரிஸ்8, ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். கேப்டன் பாபர் 32 ரன்கள் எடுத்தார். ஷான் மசூத் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி களம் இறங்கியது ஹேல்ஸ் ஒரு ரன், பில் சால்ட் 10 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர் . கேப்டன் பட்லர் 26 ரன், ஹாரிப்ரூக் 20 ரன்,மொயின்அலி 19ரன் எடுத்தனர். பென் ஸ்டாக்ஸ் அதிரடியாக விளையாடினார் . பந்துகளை விளாசி அரைசதம் எடுத்ததுடன் 52 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டி 20 கோப்பையை வென்றதுடன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பெருமையும் அந்த அணி பெற்றது.