ஜன.20.
கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய சரகம் கருப்பகவுண்டன்புதூர் சுப்பிரமணி, என்பவரது மளிகை கடைக்கு முகமது அன்சாரி, 21/25. கங்கா நகர், தாந்தோணிமலை, கரூர் என்பவர் மது போதையில் வந்து சிகரெட் கேட்டபோது, சிகரெட் விற்பனை செய்வதில்லை என கடைக்காரர் கூறியதால் பீடி கேட்டு வாங்கிச் சென்றவர் மீண்டும் சிறிது நேரம் கழித்து குவாட்டர் பாட்டிலில் மண்ணெண்ணெயை நிரப்பி, துணியை திரி போல் வைத்து, தீ பற்ற வைத்து மேற்படி மளிகை கடைக்குள் வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் காலி தண்ணீர் கேன்களின் மீது பட்டு 5 தண்ணீர் கேன்கள் எரிந்து சேதமடைந்தது.இது தொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கரூர் மாவடட்ட எஸ்.பி உத்தரவுப்படி தப்பியோடிய எதிரியை பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் கொளந்தாக்கவுண்டனூர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்தவரை போலீசார் பிடிக்க முற்பட்ட போது தப்பியோடினார். நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, வெங்கமேடு காவல் நிலையங்கள் மற்றும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையம் உட்பட மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
மேலும் கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற நபர்கள் (Trouble Mongers) மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.