ஜூன்.13.
கரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் உள்ளிட்டோருக்கு கல்வி சுகாதாரம். வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக தமிழ்நாடு கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உறுப்பினர் பதிவுக்கு ஆதார் அட்டை குடும்ப அட்டை விதவைச் சான்றிதழ், போட்டோ, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் வர வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களிலும் இந்த நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் 12.06 2025 அன்று முதல் கீழ்க்கண்டவாறு நடைபெற உள்ளது.
வட்டாரத்தின்பெயர். முகாம் நடைபெறும்நாள். முகாம் நடைபெறும் இடம்-
எனவே இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.












