மே.28.
இனாம் கரூர் நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடை காலப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து அஞ்சலக அலுவலர் (ஓய்வு) தமிழ்ச்செல்வன் விளக்கிக் கூறி பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் .கார்த்திக் தமிழ் எழுத்துகளின் சிறப்பு, தொன்மை மற்றும் அதன் எழுத்து வடிவ வரலாறு பற்றி கூறினார்.
ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களையும் உச்சரிப்பது குறித்து நாப்பழக்கப் பயிற்சியும் தமிழ் வார்த்தைகள் அதிகம் கற்றுக் கொள்ளும் வகையில் சொல்லாடல் விளையாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கங்கள் பற்றி
நூலகம் புரவலர் மணி மாஸ்டர் கருத்துரை வழங்கினார். அனைவருக்கும் திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இனாம் கரூர் கிளை நூலகர் மோகன சுந்தரம் செய்திருந்தார்.