ஜூன்.24.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 28 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில் முழுநேர வகுப்பாக இசைக்கல்வி சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முறையான பயிற்சிக்கு பின் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறதுதற்போது 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாதசுரம் தவில் துறைக்கு எழுதப்படிக்க தெரிந்திருத்தால் போதுமானது. 13 -வயதிற்கு மேல் 25 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் சேரலாம். மாணவர்கள் பெருமளவில் பயன்பெற குறைவான பயிற்சி ஆண்டிற்கு ரூ.350/-மட்டும் பெறப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக தங்கும் விடுதி வசதி மற்றும் பேருத்துகளில் இசைப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படுகிறது. அரசால் இசைக் கலை வளர இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூபாய் 400/- ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசுத்துறை மற்றும் ஆலயங்களில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலை ஆர்வமும் திறமையும் உள்ள மாணவ மாணவிகள் கரூர் ஜவகர் கடைவீதி முகவரியில் உள்ள மாவட்ட இசைப் பள்ளியின் தலைமை ஆசியரை அணுகி இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ள்ளப்படுகிறார்கள் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.












