மே.31 .
கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு இளநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் பிஏ. பிகாம், பி.பி.ஏ. பி.சி.ஏ. பி.எஸ்.சி. ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 02.06.2025 புதன்கிழமை முதல் துவங்க உள்ளது என கல்லூரி முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பி.ஏ . தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டியல். பி.பி.ஏ. பி.சி.ஏ. பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல். விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள், புவியியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் ஆகிய 18 இளநிலைப் பாடப்பிரிவுகளில் உள்ள மொத்தம் 1485 இடங்களுக்கான மாணாக்கர் சேர்க்கை தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், NCC மாணாக்கர்கள், பாதுகாப்பு படைகளின் தகுதியான பணியாளர்களின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு 02.06.2025 திங்கட்கிழமை மற்றும் 03.06.2025 செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும், பொதுக் கலந்தாய்வு 04.06.2025 முதல் 14.06.2025 வரை நடைபெற உள்ளது.
இக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவில் சேர்க்கை பெற விண்ணப்பித்த அனைத்து மாணாக்கர்களும் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரியின் வாயிலாக மின்னஞ்சல் மற்றும் அலைபேசி மூலம் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தரவரிசை பட்டியல் மற்றும் சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை கல்லூரியின் www.gackarur.ac.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்விற்கு வருகை புரியும் அனைவரும் அவசியம் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்விச் சான்றிதழ்கள் சாதிச் சான்றிதழ்கள் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு புகைப்படம் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்கள் எடுத்து வர வேண்டும். இக்கல்லூரியில் புதிதாக சேர்க்கை பெற்ற அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் 30.06.2025 முதல் வகுப்புகள் துவங்கி நடைபெறும் எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.