செப்.8.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி 2024* முகாம் முன் திட்டமிடல் கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தாவது.
தமிழ்நாடு அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24ம் கல்வியாண்டில் உயர்கல்வி தொடராத 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப் படி 2024” முகாம் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இம்முகாமின் நோக்கம் உயர்கல்வி தொடராத மாணக்கர்களை உயர்கல்வியில் சேர்ந்து எதிர்காலத்தில் அவர்கள் பயின்ற துறையில் சிறந்த வல்லுநராக உருவாக்குவதே ஆகும். மேலும், உயர்கல்வியில் சேராத மாணவர்களை மேற்படிப்பில் சேர்வதற்கு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து அனைத்து அரசுத்துறைகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை கலெக்டர் தெரிவித்தார்.
கரூர் வருவாய் வட்டத்தில் உயர்வுக்குப் படி 2024″ முகாம்கள் வருகின்ற 09.09.2024 மற்றும் 19.09.2024 ஆகிய தேதிகளிலும்.
குளித்தலை வருவாய் வட்டத்தில் 13.09.2024 மற்றும் 24.09.2024 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா, வருவாய் கோட்டாட்சியர்கள் முகமதுபைசல், தனலெட்சுமி அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள். அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.