செப்.4.
வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் Speaking For India Podcast வடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை 4 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசிய ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் இன்று (04-09-2023) வெளியிட்டுள்ள Speaking for India பாட்காஸ்ட் சீரிசின் முதல் அத்தியாயம் வருமாறு-
தமிழ்நாட்டின் முதலமைச்சராக – இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவதுதான் இந்த ‘பாட்காஸ்ட் சீரிசின்’ நோக்கம்.
இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.
2014-ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாரதீய ஜனதா கட்சி – தேர்தலுக்கு முன்னர் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
- வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம்.
- ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு.
- உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்.
- சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.
- இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.
இப்படி எல்லாம் வாயால் வடை சுட்டார்கள். பத்து ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் – இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது!
என்று பேசினார்.