நவ.14.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலம்- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் கரூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட வட்டாரங்களில் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறிஸ்தவ இஸ்லாமிய சீக்கிய புத்த பார்சி மற்றும் ஜெயின்) மேற்படி கடன் முகங்களில் கலந்துகொண்டு, கடன் விண்ணப்பங்களை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகுதிகள் – விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். கடன் மனுக்களுடன் அவர்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உண்மை சான்றிதழ் (bona fide certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (ஒரிஜினல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் கடன் உதவி பெற்று பயனடையுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார் .