அக்.8.
மாநில அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டலத்தின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற காவலர்களுக்கு கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி தளத்தில் மாநில அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி 26.09.2024 முதல் 28.09.2024 வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் , பெண்கள் மாநில அளவில் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மத்திய மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட காவல்துறை அணியினர் பாலமுருகன் தலைமை காவலர் தங்கம், சிவசக்திகுமார், காவலர் வெள்ளி பதக்கங்களையும் பெற்றனர். பாலகிருஷ்ணன் தலைமை காவலர், தர்மலிங்கம் தலைமை காவலர், கார்த்தி, காவலர் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.