ஜன.18.
கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் & அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கழக இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் பிரேம் மகாலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் – அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார். இந்த பயிற்சி பட்டறையில், இளைஞர் அணி துணைச் செயலாளர், ஈரோடு எம்.பி. கே. இ.பிரகாஷ், அரவக்குறிச்சி எம்.எல்ஏ. இளங்கோ, செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, சமூக வலைத்தள தன்னார்வலர் விக்னேஷ் ஆனந்த், கரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கமேடு சக்திவேல், கரூர் மாவட்ட இளைஞர் அணியினர், இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணராயபுரம் & குளித்தலை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இளைஞர் அணியின் பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி இன்று கரூர் மணவாடி S.K.P மகாலில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார். ஈரோடு எம்.பி. பிரகாஷ், மாண்புமிகு குளித்தலை எம்.எல்ஏ. மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, தொடர்பாளர்சூரியா கிருஷ்ணமூர்த்தி, சமூக வலைத்தளம் விக்னேஷ் ஆனந்த் கலந்து கொண்டனர்.