மார்ச்.10.
4 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்து பேசினார். அவர் பேசுகையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றாமல் இருந்த கட்சி நிர்வாகிகள் களை எடுக்கப்படுவார்கள் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கரூர் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு பாஜக பெற்றுள்ளது. வரும் தேர்தலிலும் பெரும் வெற்றியை பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்றார். நிர்வாகிகள் முருகானந்தம், கோபிநாத், சக்தி, செல்வன், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.