நவ.29.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறுதானிய உணவுப் பொருட்களை காட்சிப்படுத்திய உணவு திருவிழா-2023 கண்காட்சியினை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் திறந்து வைத்து பார்வையிட்டார். சிறப்பாக சிறுதானிய காட்சியினை அமைத்த குழுக்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கினார்.
கலெக்டர் கூறுகையில், சிறப்பு விருது என்று சொல்வதற்கு ஒரு மூன்று பேரை ஒரு அடையாளத்திற்காக தேர்வு செய்துள்ளார்கள். மற்றவர்கள் தயாரித்த உணவு அல்லது உணவு பொருட்களும் சிறப்புத்தான். அனைவருமே பரிசு பெற தகுதியானவர்கள். அனைத்து உணவு பொருட்களுமே சுவை மிகுந்ததாக இருந்தது என்றார்.
முதல் மூன்று இடத்தை பிடித்த குழுக்கள் முதல் பரிசு ரூ.5000. காசோலை மற்றும் கேடயம், கடவூர் வட்டார மகளிர் சுயஉதவி குழுவினர். 2 ம் பரிசு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி குழு. ரூ.4000 காசோலை மற்றும் கேடயம். மூன்றாம் பரிசு காசோலை மற்றும் கேடயம் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் குழுவினர். அதே போல் மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் திட்டத்தின் மூலம் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குளித்தலை வட்டாரம் ரூ.5000. ரூ.4000 கடவூர் வட்டாரம். கரூர் வட்டாரத்திற்கு சிறப்பு பரிசு ரூ.2000 அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் க.பரமத்தி, தோகைமலை, தாந்தோணி ஆகிய வட்டாரத்திற்கு பரிசு.
அரங்கு அமைத்த அனைத்து குழுவினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், இணை இயக்குநர் வேளாண்மை ரவிசந்திரன், கலால் அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் செளசல்யா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சண்முகவடிவேல். மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிபகழகம் முருகேசன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் அருண்குமார், தன்னார்வ நுகர்வோர் அமைப்பாளர்.சொக்கலிங்கம், கிராமியம் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.