ஜூன்.23.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நேற்று இரவே ஒ.பி.எஸ். தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பும், பொதுக்குழுவை நடத்த வேண்டும் என இ.பி.எஸ்., தரப்பும் விடிய விடிய வாதம் நடத்தினர். வாவாதம் அதிகாலை 4.00 மணிக்கு முடிவடைந்த நிலையில், 4.20 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்ரவிட்டனர்.
இதையடுத்து சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று காலை அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. ஓ பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் அரங்கத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். மேடையில் இருந்த மூத்த நிர்வாகிகள் யாரும் பன்னீர்செல்வத்தை வரவேற்காமல் புறக்கணித்தனர். வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அரங்கத்திற்கு வரதாமதம் ஏற்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திய லிங்கத்தை துரோகி என கோஷம் எழுப்பியதால் அதிர்ச்சி அடைந்தார்